Admissions 2020

ADMISSIONS 2020

ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, உறைவிடம்:
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், சென்னை.

12-06-2020

தாய் (அ) தந்தையை இழந்த (அ) இருவரையுமே இழந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 115 வருடங்களாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாலிடெக்னிக் முதலாமாண்டிலும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2-ம் ஆண்டிலும் கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உணவு, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் பிரிவுகள் உள்ளன. படித்து முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலையும் பெற்றுத்தரப்படும்.

இணையதள முகவரி (URL)
http://sites.google.com/view/rkmshome-admissions-2020
மூலம் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபால் மூலமும் அனுப்பலாம்.

(அ) விண்ணப்பங்களுக்கு
செயலாளர்,
ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம்,
எண் 66, பி.எஸ். சிவசாமி சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
என்ற முகவரிக்கு ரூ10/- மதிப்புள்ள postal order உடன் சுய விலாசமிட்ட ரூ10/- தபால் தலை ஒட்டிய 24 செ.மி X 10 செ.மி அளவிலான உறையை அனுப்பவும்.

(அ) நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்

கூடுதல் விவரங்களுக்கு 044-24990264, 044-24992537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். வலைதள முகவரி: http://www.rkmshome.org